பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பூனாகலை கபரகல பிரிவில் நேற்றிரவு (மார்ச் 19, 2023) ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 70 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் பூனாகலை , இலக்கம் 01 வித்தியாலய பாதுகாப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பத்தினால் ஐந்துபேர் காயமடைந்துள்ளதுடன் மூன்று வீடுகள் முழுமையாகவும் 37 வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளது. மேலும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு நிலையத்தில் உள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும் பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார் .