தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம்... |
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் 1996 இல் சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டது. 2005.12.08 ஆந் தேதிய 1422/22 ஆம் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமான அறிவித்தல் மூலமாக நிவாரண, புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைத் திட்டமிட்டு அமுலாக்குவதற்காக அனர்ந்த நிவாரண சேவைகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இது 2007.01.09 ஆந் தேதிய 1482/9 ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தல் மூலமாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையமென மீளப் பெயரிடப்பட்டு மீள்குடியமர்தல் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு மாற்றப்பட்டது. 1651/20 ஆம் இலக்கமுடைய வர்த்தமான அறிவித்தலின் பிரகாரம் இது 2010.04.30 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரத்தக்கதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது.